
செய்திகள் உலகம்
பறவை மோதியதால் நடுவானில் விமான இயந்திரத்தில் பற்றிய தீ: அமெரிக்காவில் அவரமாக தரையிறக்கப்பட்ட சரக்கு விமானம்
நியூஜெர்சி:
அமெரிக்காவில் பறவை மோதலால் FedEx சரக்கு விமானத்தின் இயந்திரத்தில் தீ பற்றி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஃபெடெக்ஸ்சரக்கு விமானம் பறவை மோதியதால் இயந்திரத்தில் தீ பற்றி எரிந்தது.
இந்தியானாபோலிஸ் நோக்கிச் சென்ற புறப்பட்ட அந்த விமானம்சிறிது நேரத்திலேயே அவசரமாக தரையிறக்கப்பட்டது.
நெவார்க்கிலிருந்து இந்தியானாபோலிஸ் நோக்கிச் சென்ற விமானம், பறவையுடன் மோதியதால் இயந்திரத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு தீப்பிடித்தது.
விமான ஊழியர்கள் திறமையாக செயல்பட்டு அவசர தரையிறக்கம் செய்தனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விமானப் பாதுகாப்பில் பறவை மோதல்கள் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருப்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன், யு.எஸ். டிபார்ட்மென்ட் ஆஃப் அக்ரிகல்ச்சர் அறிக்கைகளின்படி,
இதுபோன்ற சம்பவங்களால் விமான நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் சுமார் 500 மில்லியன் டாலர் வரை இழப்பு ஏற்படுகிறது என்றது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 1, 2025, 10:13 pm
சிங்கப்பூரில் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்குவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது
April 1, 2025, 2:04 pm
மியான்மார் நிலநடுக்கத்தில் 2,065 பேர் உயிரிழப்பு
March 31, 2025, 5:39 pm
மியான்மார் நிலநடுக்கம்: பள்ளிவாசல் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 பேர் உயிரிழந்த சோகம்
March 31, 2025, 11:56 am
சிங்கப்பூர் விமான நிலையத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட ஒன்பது பேர் நாடுகடத்தல்
March 30, 2025, 4:45 pm
மியான்மார், தாய்லாந்தை தொடர்ந்து இந்தோனேசியாவிலும் நிலநடுக்கம்
March 30, 2025, 12:56 pm
தென்கொரியாவில் காட்டுத்தீக்குக் காரணமான ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்
March 30, 2025, 12:54 pm
சொமாலியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாத கும்பலுக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல்
March 30, 2025, 12:52 pm
இஸ்தான்புலில் கண்டன போராட்டம்: ஆயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுப்பு
March 30, 2025, 10:20 am
மியான்மர் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 1,644 ஆக உயர்வு
March 30, 2025, 10:18 am