நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

முகநூலின் - Facebook - தாய் நிறுவனம் இனி மெட்டா என அழைக்கப்படும்: மார்க் ஜூக்கர்பெர்க்

கலிபோர்னியா:

உலகம் முழுவதும் அதிக பயனாளர்களை கொண்ட ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனத்திற்கு மெட்டா என்ற புதிய பெயரை அதன் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் சூட்டியுள்ளார்.
 
எதிர்கால இணையதளம் மெய்நிகர் உலகமாக மாறும் என்பதால், இந்த பெயரை தேர்ந்தெடுத்திருப்பதாக மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்துள்ளார். 

மெட்டா என்பதற்கு '... அப்பால்' என்று அர்த்தம். பிரபஞ்சத்தை ஆங்கிலத்தில் அழைக்கும் யூனிவர்ஸ் என்ற சொல்லின் இரண்டாம்பாதி பெயரான வெர்ஸை சேர்த்து, இணையத்தில் பயன்படுத்தப்படும் மெய்நிகர் தொழில்நுட்பம் மெட்டாவெர்ஸ் என அழைக்கப்படுகிறது.

இதை கருத்தில்கொண்டு, தாய் நிறுவனமான FACEBOOK INC-கிற்கு மெட்டா என பெயர் சூட்டியிருப்பதாக தெரிவிக்கிறார் மார்க் ஜூக்கர்பெர்க். 

நண்பர்கள், உறவினர்களுடன் மெய்நிகர் தொழில்நுட்பத்துடன் உரையாடும் அனுபவத்தை பயனாளர்களுக்கு கொண்டு சேர்க்க மார்க் ஜூக்கர்பெர்க் திட்டமிட்டுள்ளார். அதே சமயம் பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் போன்ற செயலிகளின் பெயர்கள் அப்படியே தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset