நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

Instagram Reels - தனிச் செயலியாகலாம்

கலிபோர்னியா:

ரீல்ஸ் எனப்படும் குறுகிய காணொளிகளுக்கெனத் தனிச் செயலியை அறிமுகம் செய்ய இன்ஸ்டாகிரெம் திட்டமிடுகிறது.

செயலியின் தலைவர் ஆடம் மொசெரி (Adam Mosseri) அது பற்றி தம்முடைய ஊழியர்களிடம் இந்த வாரம் தெரிவித்தார்.

அந்த அறிவிப்பைக் கேட்ட ஒருவர் அதனைப் பகிர்ந்துகொண்டார்.

அமெரிக்காவில் டிக் டாக் செயலியின் நிலை உறுதியில்லாமல் இருக்கிறது.

அதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள எண்ணுகிறது இன்ஸ்டாகிரெம் .

டிக் டாக் செயலி வழங்கும் அதே அனுபவத்தை அது வழங்க நினைக்கிறது.

அறிவிப்பைப் பற்றி ராய்ட்டர்ஸ் நிறுவனம் கேட்ட கேள்விக்கு மெட்டா உடனடியாகக் கருத்துத் தெரிவிக்கவில்லை.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset