நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

விமானத்தில் சடலத்திற்கு அருகே அமர்ந்திருந்த தம்பதி

மெல்பர்ன்:

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தம்பதியின் கட்டார் விமானப் பயணம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மிட்செல்லும் ஜெ்னிஃபரும் மெல்பர்னிலிருந்து டோஹாவுக்குச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களுக்கு அருகிலிருந்த பெண் பயணி எதிர்பாராவிதமாக மரனமடைந்துள்ளார்.

விமான ஊழியர்கள் பெண்ணின் சடலத்தைத் தம்பதியின் அருகே வைத்திருந்தனர்.

ஜெனிஃபர் இடம் மாறினார். ஆனால் மிட்செல்லுக்கு வேறு இடம் ஒதுக்கப்படவில்லை.

எஞ்சிய விமானப் பயணம் முழுவதும் அவர் சடலத்திற்கு அருகே அமர்ந்திருந்ததாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

விமானத்தில் பல இருக்கைகள் காலியாக இருந்தும்கூட விமான ஊழியர்கள் அவரது இடத்தை மாற்றவில்லை என்று தம்பதி குறைகூறினர்.

இதுபோன்ற சூழ்நிலையில் பயணிகளுக்கு ஆதரவு வழங்கப்படவேண்டும் என்று இருவரும் கேட்டுக்கொண்டனர்.

விமானப் பயணம் அவர்களைப் பெருமளவில் பாதித்ததாக ஜெனிஃபர் கூறினார்.

விமானத்தில் மாண்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சம்பவத்தினால் ஏதேனும் தடங்கலோ சிரமமோ ஏற்பட்டிருந்தால் அதற்கு மன்னிப்புக் கேட்கிறோம். பயணிகளைத் தொடர்புகொள்வோம் என்று கட்டார் விமான நிறுவனம் தெரிவித்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset