நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜெர்மனி தேர்தல் முடிவுகள் ஒரு பார்வை

பெர்லின்:

ஜெர்மனியின் தேர்தல் முடிவுகள் பெரும்பாலான மக்கள் நினைத்தது போல் சிடியு கட்சி அதிக இடங்களில் வெற்றி கண்டிருக்கிறது. ஆனால், தனிப் பெரும்பான்மையில் ஆட்சி செய்ய இது போதாது. 

ஆனால் தீவிர வலதுசாரி கட்சியான ஏஎப்டி இரண்டாவது இடத்தை பெற்றிருப்பது பேரதிர்ச்சி. அதுமட்டுமல்ல அது பெற்றிருக்கும் வாக்கு எண்ணிக்கை மேலும் அதிர்ச்சி அடைய வைக்கிறது.

எஸ்பிடி மூன்றாவது இடத்திற்கு சென்றது இக் கட்சியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்பதை காட்டுகிறது. கிரீன் பார்ட்டி எப்போதும் போல வாக்குகளைப் பெற்றுள்ளது. 

புதிதாக கவனத்தைக் கவரும் கட்சியாக இடதுசாரி எனக் கூறிக்கொள்ளும் லிங்க பார்ட்டி வளர்ச்சிக் கண்டிருக்கிறது. 

சிடியு கட்சி யாரோடு கூட்டணி அமைக்கின்றது என்பது முக்கியம். 
எப்படியாகினும் தீவிர வலதுசாரி ஏஎப்டி கட்சி எதிர்க்கட்சியாகவாவது ஜெர்மனி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும். ஒரு பலம் பொருந்திய ஒன்றாக வளர்ந்து இருக்கின்றது என்பதை கண்கூடாகக் காண முடிகிறது. 

இக்கட்சியின் வளர்ச்சி இதன் தாக்கத்தை வருங்காலங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிச்சயமாக காண முடியும். 

- சுபா (ஜெர்மனியிலிருந்து)

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset