நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

மலிவு விலையில் iPhone 16e

சிங்கப்பூர்:

Apple நிறுவனம் செயற்கை நுண்ணறிவுச் செயல்பாடுகள் கொண்ட அதன் புதிய மலிவு ரகக் கைத்தொலைபேசியான iPhone 16eஐ அறிமுகம் செய்துள்ளது.

அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளில் விலை குறைந்த கைத்தொலைபேசிகளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் iPhone 16e வந்துள்ளது.

கடந்த காலாண்டில் Apple கைத்தொலைபேசி விற்பனை சரிந்தது. குறிப்பாகக் கடந்த 10 ஆண்டுகளில் அதன் மலிவு ரகக் கைத்தொலைபேசியின் விற்பனை வெகுவாகக் குறைந்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

புதிய iPhone 16e கருப்பு, வெள்ளை என இரு நிறங்களில் விற்கப்படும்.

மலேசியாவில்  RM 2,999 விலைக்கு கிடைக்கும். சிங்கப்பூரில் அதன் விலை 949 வெள்ளி முதல் துவங்கும்.

அதற்கான முன்பதிவு இம்மாதம் 21ஆம் தேதி இரவு 9 மணிக்குத் தொடங்கும் என்றும் விற்பனை வரும் 28ஆம் தேதி தொடங்கும் என்றும் நிறுவனம் தெரிவித்தது.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset