செய்திகள் மலேசியா
மின்னல் எப்எம்மில் மீண்டும் கலப்படம் ஒளியேற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்: ஃபஹ்மி
கோலாலம்பூர்:
மின்னல் எப்எம்மில் மீண்டும் கலப்படம் ஒளியேற ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.
தகவல் தொடர்பு துறை அமைச்சர் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
மலேசிய வானொலி ஒளி ஒலிபரப்பு துறை இயக்குநரிடம் பேசி அதற்கான ஏற்பாடுகள் எடுக்கப்படும்.
கோலாலம்பூர் டான்ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெற்ற மலேசிய தெலுங்கு அறவாரியத்தின் மகரா சங்கராந்தி சேரட்டி கீதாஞ்சலி விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றியபோது அமைச்சர் ஃபஹ்மி இதனை அறிவித்தார்.
முன்பெல்லாம் மலேசிய வானொலியில் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை காலை பத்து மணிக்கு கலப்படம் ஒளியேறும்.
கலப்படம் நிகழ்ச்சி வழி ஏராளமான இளம் கலைஞர்கள் உருவாக்கப்பட்டார்கள்.
ஆனால் இப்போது கலப்படம் நிகழ்வு ஒளியேற்றப் படவில்லை.
மின்னல் எப்எம் பண்பலையில் கலப்படம் ஒளியேறுவதற்கு அமைச்சர் பாமி பட்சில் முன் வர வேண்டும் என்று மலேசிய தெலுங்கு அறவாரியத்தின் தலைவர் டத்தோ காந்தராவ் தமது உரையில் வலியுறுத்தினார்.
டத்தோ காந்தராவ் முன் வைத்த கோரிக்கையை ஏற்று கொண்ட அமைச்சர் ஃபஹ்மி இதற்கான முன் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார்.
மேலும் மலேசிய தெலுங்கு அறவாரியத்தின் சமூகநல திட்டங்களுக்கு உதவும் வகையில் பத்தாயிரம் வெள்ளி மானியம் வழங்குவதாகவும் அமைச்சர் ஃபஹ்மி அறிவித்தார்.
தகவல் தொடர்பு துறை அமைச்சர் பாமி பட்சில் சிறப்பு அதிகாரி டத்தோ சிவபாலன், குமரன், மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் சிறப்பு அதிகாரி மண்டிப் சிங் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 27, 2026, 8:12 pm
மக்களால் வழங்கப்பட்ட ஆணையை அம்னோ சட்டமன்ற உறுப்பினர்கள் மதிக்க வேண்டும்: அந்தோனி லோக்
April 27, 2026, 8:11 pm
இறுதித் தெளிவு கிடைக்கும் வரை மந்திரி புசார் பதவியிலிருந்து விலக மாட்டேன்: அமினுடின்
April 27, 2026, 5:04 pm
பெர்மாஸ் பகுதியில் உள்ள இந்திய சமூக தன்னார்வ தொண்டு நிறுவனத் தலைவர்களுடனான சந்திப்பு
April 27, 2026, 4:56 pm
மே தின விடுமுறை - உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் கடும் நெரிசல் ஏற்படலாம்
April 27, 2026, 4:23 pm
சைட் சாடிக் விடுதலையாவாரா அல்லது சிறையில் அடைக்கப்படுவாரா?: ஜூன் 30ஆம் தேதி தீர்ப்பு
April 27, 2026, 4:22 pm
