![image](https://imgs.nambikkai.com.my/nattu-e76d6.jpg)
செய்திகள் மலேசியா
திரளான பக்தர்களின் வருகையே பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றிக்கான காரணம்: டான்ஸ்ரீ நடராஜா
பத்துமலை:
திரளான பக்தர்களின் வருகையே பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றிக்கான முக்கிய காரணமாக உள்ளது:
ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு புறப்பட்ட வெள்ளி ரதம் 22 மணி நேரத்திற்கு பின் பத்துமலையை வந்தடைந்தது.
இதனால் அடுத்த ஆண்டு இரவு 7 மணிக்கு எல்லாம் வெள்ளி இரத ஒரு வருடத்தை ஆரம்பிக்கலாம் என்ற திட்டத்தை தேவஸ்தானம் கொண்டுள்ளது.
கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வெள்ளிரத ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
பத்துமலையில் பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை தொடர்ந்து பூர்த்தி செய்து வருகின்றனர்.
குறிப்பாக மில்லியன் கணக்கான மக்கள் இந்த தைப்பூச விழாவில் கலந்துகொண்டுள்ளனர்.
பக்தர்கள் ஏந்தி வரும் காவடிகளை காண வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்துள்ளனர்.
இதுதான் பத்துமலை தைப்பூச விழாவின் வெற்றியாகும்.
இந்த வெற்றியை தரும் பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் தொடர்ந்து தங்கள் மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ளும் என்று டான்ஸ்ரீ நடராஜா செய்தியாளர்களின் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 11, 2025, 2:02 pm
தேசிய போலிஸ்படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் பத்துமலைக்கு சிறப்பு வருகை
February 11, 2025, 1:13 pm
தைப்பூச விழாவில் மற்ற இன மக்கள் கலந்து கொள்வதால் அவர்கள் இந்துவாக மாறி விட மாட்டார்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
February 11, 2025, 12:52 pm
பத்துமலையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியர் கலாச்சார மையம் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் சாதனை: பிஎன் ரெட்டி
February 11, 2025, 12:32 pm
வெள்ளத் தணிப்புத் திட்டம் தொடர்ந்து தாமதமானால் அதிக இழப்பைச் சந்திக்க நேரிடும்: துவான் இப்ராஹிம்
February 11, 2025, 12:12 pm
சபா, சரவாக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 2,062 பேர் இன்னும் நிவாரண மையங்களில் உள்ளனர்
February 11, 2025, 12:05 pm
பேரங்காடியில் பிள்ளையை அறைந்த வீடியோவில் சிக்கிய பெண் கைது
February 11, 2025, 11:05 am
பினாங்கு தைப்பூச இரத ஊர்வலத்தில் முருக பக்தர்களோடு இலக்கவியல் அமைச்சர்
February 11, 2025, 10:07 am