நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா முழுவதும் தைப்பூச விழாவிற்கு பொது விடுமுறை வழங்க பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது: டான்ஸ்ரீ நடராஜா

பத்துமலை:

மலேசியா முழுவதும் தைப்பூச விழாவிற்கு பொது விடுமுறை வழங்க பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இதனை கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அண்மையில் பத்துமலைக்கு சிறப்பு வருகை புரிந்தார்.

இந்த வருகையின் போது பிரதமரிடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

குறிப்பாக தைப்பூச விழாவிற்கு மலேசிய முழுவதும் பொது விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

நமது பிரதமர் நல்லவர். அனைத்து இன மக்களையும் அவர் மதிக்கிறார்.

ஆகையால் இந்த கோரிக்கையையும் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கையை எடுப்பார் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.

இதனிடையே பிரதமரின் வருகையை தொடர்ந்து அரசாங்கத்திடம் இருந்து தேவஸ்தானத்திற்கு 1 மில்லியன் ரிங்கிட் நன்கொடை கிடைத்துள்ளது.

இவ்வேளையில் பிரதமருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே வேளையில் பத்துமலையில்  மேற்கொள்ளப்படவிருக்கும் மேம்பாட்டு திட்டங்களுக்கும் விரைவில் அனுமதி கிடைக்கும் என தேவஸ்தானம் நம்புகிறது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset