
செய்திகள் மலேசியா
பெண்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கிய டாக்டர் சத்தியாவதிக்கு நடிகை நயன்தாரா விருது வழங்கி கௌரவித்தார்
கோலாலம்பூர்:
தமிழ் திரையுலகின் Lady Superstar நயன்தாராவின் Femi9 மாதவிடாய் நப்கின் நிறுவனத்தின் ஓராண்டு நிறைவு விழாவில் மலேசியாவைச் சேர்ந்த டாக்டர் சத்தியாவதிக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஜனவரி 10-ஆம் தேதி Femi9 ஓராண்டு நிறைவு விழா மதுரை வேளம்மாள் மருத்துவக் கல்லூரியில் மிக விமரிசையாக நடைபெற்றது.
மலேசியாவில் Femi9 மாதவிடாய் நப்கின்களின் அதிகாரப்பூர்வ விற்பனையாளராகத் திகழும் வம்சம் கருதரிப்பு மையத்தின் நிறுவனருமான டாக்டர் சத்தியாவதிக்கு சிறந்த விநியோகஸ்தருக்கான விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
மலேசியாவில் Femi9 மாதவிடாய் நப்கின் தயாரித்து வெளியிடும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முதன்மை காரணமாக டாக்டர் சத்தியாவதி திகழ்கின்றார்.
கடந்த ஏழு ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட தம்பதிகளுக்குக் குழந்தை பாக்கியத்தை அமைத்து தந்த மருத்துவராக ச் செயல்பட்டு வந்த இவர் தற்போது நாட்டின் முன்னணி பெண் வர்த்தகராவும் உருவெடுத்துள்ளார்.
மலேசியாவில் நடத்தப்பட்ட Meet and Greet போட்டியில் வெற்றி பெற்ற Vanguard Digital Academy-லிருந்து Ms.Shana & Mr.Andrew, Gkdreamcake House-லிருந்து Mrs.Gayatry Mohan ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அதுமட்டுமல்லாமல், நாட்டின் வடப்பகுதியில் Femi9 மாதவிடாய் நப்கின்களை அதிகமாக விற்பனை செய்ததற்கான சிறந்த விற்பனையாளருக்கான விருது Ram Fertility & Women Specialist's clinic-க்கு வழங்கப்பட்டது. பினாங்கு மாநிலத்தில் ஒரு நாளில் 5000 அதிகமான Femi9 மாதவிடாய் நப்கின்களை இவர்கள் விற்பனை செய்துள்ளனர். இந்த விருதை அஸ்வினி சந்திரன், ரிஷினி மற்றும் நூர் இஜாத்தி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மகப்பெறு மருத்துவர் டாக்டர் அருணா Femi9 மாதவிடாய் நாப்கின்கள் நன்மைகள் குறித்துப் பேசினார். இந்த வகை நாப்கின்கள் 100% இயற்கையான வேதிப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் பெண்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவதாக அவர் கூறினார்.
மாதவிடாய் காலத்தில் பெண்களின் சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஃபெமி9 நிறுவனம், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாதவிடாய் சுகாதாரப் பொருட்களை உருவாக்குவதில் முன்னோடியாக விளங்குகிறது.
குறிப்பாக, 100% இயற்கையான வேதிப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும் நப்கின்கள் பெண்களுக்கு பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. பெண்களின் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வை அதிகரித்து, எல்லோருக்கும் மலிவாக கிடைக்கும் வகையில் உழைத்து வரும் இந்த நிறுவனம் பெண்களின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 16, 2025, 5:24 pm
ரோன் 95 பெட்ரோலுக்கான மானியத் தொகை குறைக்கப்படும்: நிதியமைச்சகம் உறுதி
May 16, 2025, 2:57 pm