நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தைப்பூச விழாவை இந்து மக்கள் அமைதியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாட வேண்டும்: பிரதமர் வேண்டுகோள்

பத்துமலை:

தைப்பூச விழாவை இந்து மக்கள் அமைதியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாட வேண்டும்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

தைப்பூச விழாவின் ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக பத்துமலைக்கு வருகை தந்திருந்தேன்.

டான்ஸ்ரீ நடராஜா தலைமையிலான ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தினர் தைப்பூச விழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

இவ்வேளையில் அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்து மக்கள் இந்த தைப்பூச விழாவை அமைதியுடன் பாதுகாப்புடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

பல அபிவிருத்திகளின் வாயிலாக தேவஸ்தானம் பத்துமலையை உலக தரத்திற்கு உயர்த்தியுள்ளது.

அதே வேளையில் பத்தமலையில் புதியதாக மேற்கொள்ளப்படவிருக்கும்  பல்நோக்கு மண்டபம், மின் படிக்கட்டு ஆகிய திட்டம் குறித்து எனக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இத் திட்டங்கள் குறித்து உரிய ஆய்வுகளுக்கு பின் அனுமதி வழங்கப்படும்.

குறிப்பாக மத்திய, மாநில அரசுகள் இத் திட்டங்களுக்கு தாமதமளிக்காமல் ஆதரவளிக்கும் என்று டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset