நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காஸாவிற்கு எதிரான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கருத்து மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது

மாஸ்கோ: 

காஸா பகுதியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிர்மப் கூறிய கருத்து தொடர்பாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக ரஷ்யா நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது 

அப்பகுதியில் நடைபெற்று வரும் போர் நிறைவடைந்தவுடன் இஸ்ரேலிய படையினர் காஸா பகுதியை அமெரிக்காவிடம் ஒப்படைப்பார்கள் என்று டிரம்ப் கூறினார். 

மேலும் அப்பகுதியில் உள்ள பாலஸ்தீன மக்கள் வேறு பகுதிகளுக்குச் சென்று குடியேறலாம் என்றும் டிரம்ப் சொன்னது இஸ்லாமிய சமூகத்தை அதிருப்தி அடைய செய்துள்ளது 

காஸாவை அமெரிக்காவின் கட்டுக்குள் கொண்டு வந்து அப்பகுதியில் பல மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று இந்த வார தொடக்கத்தில் டிரம்ப் கூறியிருந்தார். 

தற்போதைக்கு அப்பகுதியில் உள்ளவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படும் என்று ரஷ்யா நாட்டு வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் மரியா சகரோவா சொன்னார்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset