நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டு அமெரிக்காவிலிருந்து கள்ளக் குடியேறிகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர்: காங்கிரஸ் வேதனை

புதுடெல்லி: 

சட்டவிரோதமாக அமெரிக்காவில் கள்ளத்தனமாகக் குடியேறிய இந்தியர்களில் 104 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம் நேற்று பிற்பகல் பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஸ்ரீ குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. 

இந்த விமானம் பிற்பகல் 1.55 மணிக்கு தரையிறங்கியது.

இந்த விமானத்தில் 104 இந்தியர்களில் 30 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், தலா 33 பேர் ஹரியானா, குஜராத் மாநிலத்தையும், தலா மூன்று பேர் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தையும், இரண்டு பேர் சண்டிகரையும் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எனினும், நாடு கடத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

முன்னதாக, அமெரிக்க ராணுவ விமானம் C-17, அந்நாட்டில் சட்டவிரோதமாக வசித்து வந்த 205 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்டதாக தகவல்கள் தெரிவித்தன. 

அமெரிக்காவில் சுமார் 4.78 கோடி பேர் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த சுமார் 8 லட்சம் பேர் அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டபோது, அவர்களின் கைகளில் விலங்குகள் மாட்டப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருந்தது” என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்திருந்தது கவனிக்கத்தக்கது.

- ஃபிதா

 

​​​​

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset