
செய்திகள் இந்தியா
மகா கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உண்மை எண்ணிக்கை என்ன? முப்பதா அல்லது மூன்றாயிரமா?: எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்வி
புது டெல்லி:
உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலால் உயிரிழந்தர்களின் உண்மையான எண்ணிக்கையை அரசு வெளயிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தின.
மக்களவையல் இதுதொடர்பாக பேசிய நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, கும்பமேளா உயிரிழப்புக்கு யார் பொறுப்பேற்பது. அரசியலும், மதமும் இணைந்தால் அப்பாவி மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.
கும்பமேளாவில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற உண்மையான தகவல் தெரிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களின் எண்ணிக்கையும், அரசு நிர்வாகத்தில் பட்டியினத்தவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் சேர்ந்த அதிகாரிகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே வருகிறது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது என்றார் அவர்.
சமாஜவாதி கட்சியின் எம்பி ஜெயாபச்சன், உயிரிழந்த ஏராளமான பக்தர்களின் உடல்கள் யமுனையில் தூக்கி வீசப்பட்டன என்று குற்றம்சாட்டினார்.
குறைந்தது 3000 பேர் உயிரிழந்திருக்கலாம். யோகியின் அரசு அதனை மூடி மறைக்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 4:06 pm
மியான்மரில் டிரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவம்
July 14, 2025, 7:09 am
ஆள் உயர ராஜ நாகம்: அசராமல் கையில் பிடித்திருந்த ஆடவர்
July 13, 2025, 9:20 pm
டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த Audi கார்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm