நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

அமெரிக்க தொழிலாளர் சந்தை பலவீனம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு 

கோலாலம்பூர்:

அமெரிக்க டாலர் குறியீடு, (DXY) சரிந்து தொழிலாளர் சந்தை பலவீனமான நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்துள்ளது. 

இன்று காலை 11 மணி நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 4.4285/4480 ஆக வலுவடைந்தது.

இதற்கிடையில், மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராக மலேசிய ரிங்கிட் குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டது.

ஜப்பானிய யென்னுக்கு எதிராக உள்ளூர் நாணயம் 2.8581/8645 இலிருந்து 2.8729/8857 ஆக பலவீனமடைந்தது.

யூரோ நாணயத்தோடு ஒப்பிடும்போது 4.5905/6003 இலிருந்து 4.5941/6144 ஆகவும், பிரிட்டிஷ் பவுண்டிற்கு எதிராக 5.5167/5285 இலிருந்து 5.5259/5502 ஆகவும் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு குறைந்தது.

ஆசியான் நாணயங்களுக்கு எதிராகவும் ரிங்கிட் கலவையாக வர்த்தகம் செய்யப்பட்டது.

பிலிப்பைன்ஸ் பெசோவுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 7.61/7.63 இலிருந்து 7.59/7.63 ஆக உயர்ந்தது.

மேலும் இந்தோனேசிய ரூபாயுடன் ஒப்பிடும்போது 270.8/272.1 ஆக உயர்ந்தது.

இந்நிலையில், இந்திய ரூபாய்க்கு எதிராக ஒரு மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு  19.44-ஆக வணிகம் ஆனது. 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset