
செய்திகள் விளையாட்டு
உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரன் நான் தான்: கிறிஸ்டியானோ ரொனால்டோ
லிஸ்பன்:
இன்று தனது நாற்பதாவது வயதை எட்டும் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ வரலாற்றில் தன்னை விட சிறந்த வீரர் யாரும் இல்லை என்று தாம் கருதுவதாக அவர் பெருமிதமாகத் தெரிவித்துள்ளார்.
கால்பந்து வரலாற்றில் மிகச்சிறந்த வீரர் என்றால் அது நான்தான்.
சிலருக்கு மாரடோனா, மெஸ்ஸி, பீலே ஆகியோரை பிடிக்கலாம். அவர்களின் விருப்பத்தை நான் மதிக்கிறேன். ஆனால் கோல்களின் அடிப்படையில் என்னைவிடச் சிறந்த வீரர்கள் யாரும் இல்லை என அவர் ஸ்பெயின் நாட்டின் லா செக்ஸ்தா தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
ஆனால், கிறிஸ்டியானோ முழுமையானவர் அல்ல என்று சொல்வது பொய்.
மேலும் பேசிய அவர், நான் இதுவரை இருந்த வீரர்களில் மிகவும் முழுமையான வீரர் என்று நினைக்கிறேன். அது என் கருத்து என்றார்.
கால்பந்தில் நான் எல்லாவற்றையும் செய்கிறேன். நான் நன்றாக Heading செய்வேன். செட் பீஸஸ்களை நன்றாக எடுக்கிறேன்.
எனது இடது கால் மூலம் சிறப்பாக ஷூட் செய்கிறேன், வேகமாகவும், வலிமையாகவும், உயரவும் குதிக்கிறேன் என்றார்.
இந்நிலையில் கிளப் போட்டிகளில் கிட்டத்தட்ட அனைத்துக் பட்டங்களையும் வென்றுவிட்டாலும், இன்னும் ரொனால்டோ கால்பந்து உலகக் கோப்பையை தனது அணிக்காக வெல்லவில்லை.
ரொனால்டோ ஐந்து முறை Ballons d'Or விருதுகள் உட்பட எண்ணற்ற பிற கௌரவங்களை வென்றுள்ளார். மேலும் பல சாதனைகளையும் ரொனால்டோ படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 12:12 pm
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
September 15, 2025, 12:11 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
September 14, 2025, 10:35 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
September 14, 2025, 10:09 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
September 13, 2025, 1:50 pm
தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்
September 13, 2025, 10:44 am
எம்பாப்பேவை நோக்கி குரங்கு சைகைகளுடன் கேலி செய்த ஓவியோடோ ரசிகர் கைது
September 12, 2025, 7:25 am
போர்த்துகலில் எல்லா காலத்திலும் சிறந்தவர் வீரராக ரொனால்டோ தேர்ந்தெடுக்கப்பட்டார்
September 11, 2025, 8:15 am
யமால் கிட்டத்தட்ட பாயர்ன் முனிச் அணிக்கு சொந்தமாகி விட்டார்
September 11, 2025, 8:12 am