நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

விமான விபத்தின் எதிரொலி: Air Busan நிறுவனப் பங்குகள் சரிந்தன

சியோல்:

ஏர் புசான் (Air Busan) நிறுவனத்தின் பங்குகள் சரிந்தன.

இந்த வார தொடக்கத்தில் அந்த நிறுவனத்தின் விமானம் ஒன்று தீப்பிடித்ததை அடுத்து அது நடந்துள்ளது.

தென் கொரியாவின் விமான பங்குகளில் ஏர் புசான் பங்குகள் மிக மோசமான நிலையில் உள்ளன.

பங்குகளின் மதிப்பு கிட்டத்தட்ட 6.1 விழுக்காடு குறைந்தது.

அதனுடைய போட்டி நிறுவனமான T'Way Air நிறுவனத்தின் பங்குகள் 9 விழுக்காடு அதிகரித்தன.

ஜெஜு ஏர் நிறுவனத்தின் பங்குகள் 0.8 விழுக்காடு சரிந்தன.

கொரியன் ஏர்லைன்ஸ், ஆசியானா ஏர்லைன்ஸ் ஆகியவற்றுடைய பங்குகளின் மதிப்பில் மாற்றமில்லை.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset