நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எம்ஏசிசியின் அனைத்துலக பயிற்சி, படிப்புகளில் பங்கேற்க இந்தியா ஆர்வம் காட்டுகிறது

புத்ராஜெயா:

எம்ஏசிசியின் அனைத்துலக பயிற்சி, படிப்புகளில் பங்கேற்க இந்தியா ஆர்வம் காட்டுகிறது.

எம்ஏசிசி எனப்படும் மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.

மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என். ரெட்டி, எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கியை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.

புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி  தலைமையகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இச்சந்திப்பில் இந்த ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டதாக சமூக ஊடகங்களில் ஒரு பதிவின் மூலம் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அறிவித்தது.

சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஊழல் பிரச்சினையில் பல்வேறு முயற்சிகள், மூலோபாய ஒத்துழைப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

டான்ஸ்ரீ அசாம் பாக்கி தனது வரவேற்பு உரையில் ரெட்டியின் ஆர்வத்திற்கு பாராட்டு தெரிவித்தார்.

மேலும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதையும், சர்வதேச அமைப்புகளுடன் எம்ஏசிசியின் ஈடுபாட்டை அதிகரிக்கும் அவரது நோக்கத்தையும் வரவேற்றார் என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset