நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண்டிகைக் காலத்திற்கான இலவச டோல் விவகாரம் வெள்ளிக்கிழமை கூடும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்: ஃபஹ்மி

புத்ராஜெயா:

பண்டிகைக் காலத்திற்கான இலவச டோல்  விவகாரம் வெள்ளிக்கிழமை கூடும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் கூறினார்.

பண்டிகை காலத்தை ஒட்டி இலவச டோல்  வழங்குவதை நிறுத்துவதாக அரசாங்கம் அறிவித்தது.

பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி நேற்று தெரிவித்தது போல், இது முன்னர் எடுக்கப்பட்ட கொள்கை முடிவாகும்.

இந்த விவகாரம் குறித்து பல்வேறான கருத்துகள் வெளிவந்த வண்ணமாக உள்ளது.

இதனால் அரசாங்கம் அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்று, அடுத்து எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கைகளை ஆய்வு செய்யும்.

பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பியதும் வெள்ளிக்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும்.

இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்படும்.

குறிப்பாக மக்களுக்கு உதவ மிகவும் பயனுள்ள, இலக்கு வைக்கப்பட்ட அணுகுமுறை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset