நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாயாப் பல்கலைக்கழகத்தின் கேகே மார்ட் மீது சாயம் பூசப்பட்டது தொடர்பில் மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது: கு மஷாரிமான் கு மஹ்மூத் 

கோலாலம்பூர்:

மலாயா பல்கலைக்கழகத்திலுள்ள கேகே மார்ட் மீது சிவப்பு சாயம் பூசப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணைக்கு உதவ மூவரிடம் காவல்துறையினர் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்டக் காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் கு மஷாரிமான் கு மஹ்மூத் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ள காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறை அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக  கு மஷாரிமான் கு மஹ்மூத் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

முன்னதாக, மலாயா பல்கலைக்கழகத்திலுள்ள கேகே மார்ட்டின் மீது சிவப்பு வண்ண சாயம் வீசப்பட்டது.

இந்தச் சம்பவம் சமீபத்திய ஹாம், சீஸ் சாண்ட்விச் சர்ச்சையுடன் தொடர்புடையதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset