நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாளை முதல் ரோன் 97 வகை பெட்ரோல், டீசலின் விலை 5 சென் உயர்வு 

பெட்டாலிங் ஜெயா: 

நாளை முதல் ரோன் 97 வகை பெட்ரோல், டீசலின் விலை 5 சென் உயர்வதாக நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. 

உலக சந்தையில் எண்ணெய் விலைகளின் அதிகரிப்பால் இந்த விலை உயர்வு ஏற்பட்டதாக நிதியமைச்சகம் தெரிவித்தது. 

தற்போது ரோன் 97 வகை பெட்ரோல் லிட்டருக்கு 3 சென் 38 சென்னுக்கு விற்கப்படும் நிலையில் நாளை முதல் 5 சென் அதிகரித்து ரோன் 97 வகை பெட்ரோல் லிட்டருக்கு 3 சென் 43 சென்னாக விற்பனை செய்யப்படும்.

அதேபோல், டீசல் லிட்டருக்கு 3 ரிங்கிட் 8 சென்னாக விற்கப்பட்ட நிலையில் நாளை முதல் 5 சென் அதிகரித்து அது லிட்டருக்கு 3 ரிங்கிட் 13 சென்னாக விற்கப்படும்.  

கடந்தாண்டு ஜூன் 10-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட விலையுடன் ஒப்பிடும்போது தீபகற்பத்தில் டீசலின் சில்லறை விலை இன்னும் குறைவாகவே உள்ளது.

இது லிட்டருக்கு 3 ரிங்கிட் 35 சென் ஆகும் என்று நிதியமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரோன் 95 பெட்ரோலின் விலையில் எந்த மாற்றமும் நிகழ்வில்லை. அது தீபகற்ப மலேசியாவில் லிட்டருக்கு 2 ரிங்கிட் 5 சென்னிற்கு விற்பனை செய்யப்படுகிறது. 

உலகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வு பராமரிக்கப்படுவதை உறுதி செய்ய பொருத்தமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று அவர் கூறினார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset