செய்திகள் மலேசியா
இணைய வசதியைப் பயன்படுத்துபவர்களுக்கான வயது வரம்பு கட்டுப்பாடு கொண்டு வரும் திட்டமில்லை: ஃபஹ்மி ஃபாட்சில்
புத்ரா ஜெயா:
இணைய வசதியைப் பயன்படுத்துபவர்களுக்கான வயது வரம்பு கட்டுப்பாடுகளை விதிப்பதில் மற்ற நாடுகளின் வழியைப் பின்பற்ற அரசாங்கம் தற்போது எந்தத் திட்டமும் கொண்டிருக்கவில்லை என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.
அதற்கு பதிலாக, இணையப் பாதுகாப்பு பிரச்சினைகளைக் குறிப்பாக குழந்தைகள் சம்பந்தப்பட்டவற்றை நிவர்த்தி செய்வதற்கு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.
உதாரணமாக, ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான வயது வரம்பை 16-ஆக அந்நாட்டு அரசு நிர்ணயம் செய்துள்ளது.
இதற்கிடையில், இணையக் குற்றங்களைக் குறைப்பதற்காக மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் மற்ற நாடுகளிலுள்ள ஒழுங்குமுறை அமைப்புகளுடன் சர்வதேச உறவுகளை வலுப்படுத்தும் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக ஃபஹ்மி கூறினார்.
இணைய, இயங்கலைக்களுக்கான பாதுகாப்பு தொடர்பான சிக்கல்களைப் பிரிக்க முடியாது.
குறிப்பாக குற்றவாளிகள் சமூக ஊடக தளங்களுக்கு பெருமளவில் இடம்பெயர்வதால்.
பிற நாடுகளில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகள், சட்ட நடவடிக்கைகள் எங்களுக்கு வழிகாட்டுதலாக இருக்கும் என்று அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 22, 2025, 11:17 pm
எம்ஏசிசியின் அனைத்துலக பயிற்சி, படிப்புகளில் பங்கேற்க இந்தியா ஆர்வம் காட்டுகிறது
January 22, 2025, 11:02 pm
மருத்துவ நிபுணரின் மரணத்திற்கு பகடிவதை காரணம் அல்ல: டான்ஸ்ரீ போர்ஹான் டோலா
January 22, 2025, 10:53 pm
ஆசிரியர் இடமாற்ற செயல்முறை மெதுவாக நடக்கவில்லை: கல்வியமைச்சர் மறுப்பு
January 22, 2025, 6:01 pm
நாளை முதல் ரோன் 97 வகை பெட்ரோல், டீசலின் விலை 5 சென் உயர்வு
January 22, 2025, 5:23 pm