நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடல் உணவுகளை ஏற்றிச் சென்ற லோரி கவிழ்ந்தது

ஜொகூர் பாரு: 

கோத்தா திங்கி, மெர்சிங் ஆகிய பகுதியை இணைக்கும் சாலையில் கடல் உணவுகளை ஏற்றிச் சென்ற லோரி கவிழ்ந்து. 

இதனால் லோரியில் ஏற்றிச் செல்லப்பட்ட மீன், இறால் போன்ற கடல் உணவுகள் சாலையில் கொட்டியதைத் தொடர்ந்து அதனைப் பொது மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர். 

வழிப்போக்கர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, சம்பவ இடத்திலிருந்து கடல் உணவுகளை விரைவாக அள்ளியுள்ளனர். 

இந்த லோரி விபத்து காலை 9:20 மணியளவில் நிகழ்ந்ததாகவும், இரண்டு கார்களும் ஒரு லாரியும் இதில் சிக்கியதாகவும் கோத்தா திங்கி காவல்துறைத் தலைவர் கண்காணிப்பாளர் யூசோப் ஓத்மான் கூறினார். 

இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், விதி 10 LN 166/59 இன் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது என்றும் அவர் கூறினார். 

விபத்துத் தொடர்பாக மூன்று ஓட்டுநர்களும் தங்களின் புகார்களைப் பதிவு செய்துள்ளனர். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset