நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவ நிபுணரின் மரணத்திற்கு பகடிவதை காரணம் அல்ல: டான்ஸ்ரீ போர்ஹான் டோலா

லஹாட் டத்து:

மருத்துவ நிபுணரின் மரணத்திற்கு
பகடிவதை காரணம் அல்ல என்று சுயாதீன சிறப்புக் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ போர்ஹான் டோலா கூறினார்.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சபா லஹாட் டத்து மருத்துவமனையில் டாக்டர் தே டியான் யா என்ற மருத்துவ நிபுணர் மரணமடைந்தார்.

இம்மருத்துவரின் மரணத்திற்கு பகடிவதை காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இந்நிலையில் அம் மருத்துவரின் மரண விவாகாரத்தை விசாரிக்க எனது தலைமையில் சுயாதீன சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.

இக் குழுவின் கீழ் முழுமையாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

இவ் விசாரணையில் அடிப்படையில் அம்மருத்துவ நிபுணரின் மரணத்திற்கு
பகடிவதை காரணம் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.

மேலும், தனது குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் கண்டுபிடிப்புகள் வாயிலாக, பாதிக்கப்பட்டவர் தனது வேலையின் எல்லைக்கு வெளியே பணிகளைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறவில்லை என்று போர்ஹான் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset