நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவகத் தொழிலில் ஏற்படும் அந்நியத் தொழிலாளர் பிரச்சினை நாட்டில் பெரும் தாக்கத்தை உருவாக்கும்: பிரெஸ்மா - பிரிமாஸ் எச்சரிக்கை

கோலாலம்பூர்:

உணவகத் தொழிலில் ஏற்படும் அந்நியத் தொழிலாளர் பிரச்சினை நாட்டில் பெரும் தாக்கத்தை உருவாக்கும்.

பிரெஸ்மா - பிரிமாஸ் சங்கங்கள் கூட்டாக இந்த எச்சரிக்கையை விடுத்தன.

மலேசியாவில் ஆயிரக்கணக்கான முஸ்லிம், இந்திய உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்கள் அனைத்தும் அந்நியத் தொழிலாளர்களை நம்பித்தான் உள்ளன.

ஆனால் கடந்தாண்டு மார்ச் மாதம் உணவகங்களுக்கான அந்நியத் தொழிலாளர்களை தருவிக்கும் நடவடிக்கைகள் முடக்கப்பட்டது.

அதே வேளையில் மாற்றுத் தொழிலாளர்களும் எங்களுக்கு கிடைப்பது இல்லை.

இதனால் உணவகத் தொழில் துறையில் உள்ளவர்கள் மீண்டும் பல சிக்கல்களை எதிர்நோக்கத் தொடங்கி விட்டனர்.

உண்மையில் உணவகத் தொழில் என்பது மிகப் பெரிய சங்கிலி தொடர் வர்த்தகமாகும்.

இதனால் அந்நியத் தொழிலாளர் இல்லாமல் போனால் அது நாட்டில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆகையால், எங்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிமடுக்க வேண்டும் என்று பிரெஸ்மா தலைவர் டத்தோ ஜவஹர் அலி கூறினார்.

அந்நியத் தொழிலாளர்களுக்கு லெவி கட்டண உயர்வு, சம்பள உயர்வு, ஈபிஎஃப், தரமான தங்குமிடம் என உணவக உரிமையாளர்கள் பல்வேறு சுமைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அரசு விதிக்கும் அனைத்து சட்டங்களையும் பின்பற்றி தவறாமல் அமல்படுத்தி வருகின்றோம்

இருந்தபோதிலும் அந்நியத் தொழிலாளர்கள் கிடைப்பதில் தொடர்ந்து சிக்கலை எதிர்நோக்கி வருகிறோம்.

இதுபோன்ற சிக்கல்கள் உணவகத்துறைக்கு தான் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

குறிப்பாக இதனால் உணவுகளின் விலைகள் உயரவும் வாய்ப்புகள் உள்ளது.

மேலும் கடந்த கோவிட்  காலத்தில் நிறைய உணவகங்கள் மூடப்பட்டது. அதே போன்ற நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று பிரிமாஸ் தலைவர் டத்தோ சுரேஷ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset