நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இந்த ஆண்டு 10 புதிய விமான நிறுவனங்களை வரவேற்க  மலேசியா இலக்கு கொண்டுள்ளது

சிப்பாங்:

2025ஆம் ஆண்டில் 10 புதிய விமான நிறுவனங்களை வரவேற்க மலேசியா விமான நிலைய ஹோல்டிங்ஸ் இலக்கு கொண்டுள்ளது.

மலேசியா விமான நிலைய ஹோல்டிங்ஸின் நிர்வாக இயக்குனர் டத்தோ முஹம்மத் இசானி கானி தெரிவித்தார்.

இத் திட்டத்தில் ஆசியா, ஐரோப்பாவின் முக்கிய சந்தைகளில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இந்த உத்தி, 2026ஆம் ஆண்டு மலேசிய வருகை ஆண்டிற்கு நாங்கள் தயாராகும் போது போக்குவரத்து வளர்ச்சியை அதிகரிக்க உதவும்.

மேலும் நாட்டை உலகத்துடன் இணைப்பதற்கும் தடையற்ற பயண அனுபவத்தை வழங்குவதற்கும் எங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டில் மலேசியா விமானப் போக்குவரத்துத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அவ்வாண்டு 12 புதிய விமான நிறுவனங்கள், 16 மறு இணைப்பு சேவை அறிமுகம் செய்யப்பட்டது.

இது 24 புதிய பயண இடங்களை உட்படுத்தியது என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset