நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் கேவிடி தங்க மாளிகை அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது

கோலாலம்பூர்:

இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தகத் தலமாக விளங்கி கொண்டிருக்கும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் இன்று கே.வி.டி. கோல்ட் அண்ட் டைமன் தங்க மாளிகை அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது.

கேவிடி கோல்ட் அண்ட் டைமன் தங்க மாளிகையின் உரிமையாளர் தங்கதுரையின் இது மூன்றாவது நகைக்கடையாகும்.

தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் இரு தங்க நகைக் கடைகள் வெற்றிகரமாக இயங்கி வரும் வேளையில் இது மூன்றாவது தங்க மாளிகையாகும்.

மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர்.நடராஜா ஆகியோர் கூட்டாக கேவிடி கோல்ட் அண்ட் டைமன் தங்க மாளிகையை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.

பிரிக்பீல்ட்ஸ் காரா சாரம் உணவகத்தின் உரிமையாளர் ஸ்ரீதரன், கோலாலம்பூர் பெரிய மருத்துவமனை ஸ்ரீ முருகன் பரிபாலன சபை கோவில் தலைவர் டத்தோ சுரேஸ், டான்ஸ்ரீ பூவன், மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ சுரேஸ் கோவிந்தசாமி, சிலாங்கூர் மாநில மஇகா தலைவர் டத்தோ சங்கர் ஐயங்கர், பேரா மாநில இந்திய நகைக்கடை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ அமாலுடின், மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா, மலேசிய இந்தியர் பொற்கொல்லர் நகை வணிகர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ராசூல் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

கேடிவி கோல்ட் அண்ட் டைமன் தங்க மாளிகையில் அனைத்து டிசைன்களில் விதவிதமான தங்க நகைகளும் வைர நகைகளும் விற்கப்படுவதாக அதன் உரிமையாளர் தங்கதுரை தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset