நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மாறுபட்ட வேலை நேரம் அமைப்பு சுகாதாரப் பணியாளர்களின் பணிச் சுமையை குறைக்கும்: சூல்கிப்ளி

புத்ராஜெயா:

மாறுபட்ட வேலை நேரம் அமைப்பு முறை சுகாதாரப் பணியாளர்களின் பணிச் சுமையை குறைக்கும்.

சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிப்ளி அஹ்மத் இதனை கூறினார்.

மாறுப்பட்ட வேலை நேரம் அமைப்பு முறை தற்போது பல கேள்விகளை எழுப்பி வருகிறது.

இப்புதிய அமைப்பு முறை மருத்துவர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்களின் பணிச் சுமையைக் குறைப்பதற்கான ஒரு படியாகும்.

மருத்துவ அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுக்கான தற்போதைய ஆன்-கால் அமைப்பு, ஷிப்ட் அமைப்புக்கு இணையாக இயங்கும் மூன்றாவது அமைப்பு இதுவாகும்.

மாறுப்பட்ட வேலை நேரம் அமைப்பு என்பது கடந்தாண்டு ஜனவரி 22ஆம் தேதி முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதார வசதிகளில் பல துறைகளில் மருத்துவ அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.

அடிப்படையில் சுகாதார அமைச்சிடம் அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட பணி அட்டவணை ஏற்பாடுகளில் முன்மொழியப்பட்ட மாற்றமாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset