நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆலயங்களை உடைப்பது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

நாட்டில் ஆலயங்களை உடைப்பது எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தீர்வாகாது.

சிரம்பான் தொகுதி பெர்சத்து சயாப் பிரிவுத் தலைவரும் நீலாய் சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

நாட்டில் அனுமதியில்லாத வழிபாட்டுத் தலங்கள் பிரச்சினை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு, தனியார் நிலங்களில் உள்ள ஆலயங்களுக்கு எதிராக ஒரு கும்பல் தகாத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக ஒரு சில ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளது. ஆலயங்களை உடைப்பது என்பது கண்டிக்கத்தக்க ஒன்றாகும்.

மேலும் காலம் காலமாக இருந்து வரும் ஆலயங்களின் மற்றவர்களின்  நிலங்களில் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

அதன் அடிப்படையில் இந்த ஆலயங்களை உடைப்பது என்பது இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்காது.

அதே வேளையில் உரிய பேச்சுவார்த்தைகல் நடவடிக்கைகள் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்பு காண அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்.


மேலும் இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்நோக்கி இருக்கும் ஆலய நிர்வாகங்கள் சட்ட ரீதியில் எவ்வாறு இதற்கு தீர்வு காணலாம் என சிந்திக்கலாம் என்று டத்தோ சரவணக்குமார் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset