நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நான் விடுமுறையில் செல்ல வேண்டிய அவசியமில்லை: அசாம் பாக்கி

கோலாலம்பூர்:

நான் விடுமுறையில் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.

எனக்கு செந்தமான பங்கு உரிமை விவகாரம் தொடர்பாக விசாரணை  நடந்து வருகிறது.

இந்த விசாரணையைத் தொடர்ந்து விடுப்பு எடுக்கத் தேவையில்லை .

முன்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு பணியில் இருந்த சில தனிநபர்களும் இருந்தனர்.

விசாரணை மேற்கொள்ளப்படும் வரை தனக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று விரும்பிய சில தரப்பினருக்கு பதிலளிக்கும் விதமாக நான் விடுப்பு எடுக்கத் தேவையில்லை என்று அவர் கூறினார்.

டெங்கிலின் கம்போங் சுங்கை புவாவில் கம்போங் அங்கட் மதானியின் திறப்பு விழாவிற்குப் பிறகு அவர் இதனை கூறினார்.

இந்த விஷயம் ஒரு பிரச்சினை அல்ல. அத்தகைய கோரிக்கையை வைப்பது யாருடையது.

அது அவர்களின் விருப்பம். நான் விடுப்பில் செல்ல வேண்டிய அவசியமில்லை.

அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு சிறப்புக் குழுவால் விசாரிக்கப்படுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset