நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய வகை சீன இடைநிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் RM20 மில்லியன் நிதி: பிரதமர் அன்வார் இப்ராஹிம்

ஈப்போ:

நாடு முழுவதும் உள்ள தேசிய வகை சீன இடைநிலைப் பள்ளிகளின் (SMJKC) வசதிகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் கூடுதல் RM20 மில்லியன் நிதியை வழங்குவுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்துள்ளார்.

நிதியமைச்சராகவும் உள்ள அன்வார், இந்த ஒதுக்கீடு கல்வித் துறையை வலுப்படுத்தவும், பள்ளி வசதிகளைத் தொடர்ந்து மேம்படுத்தவும், மடானி அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என்று தெரிவித்துள்ளார்.

“பள்ளிகளின் அடிப்படை வசதிகள், தேவைகளை மேம்படுத்துவதற்காக  தேசிய வகை சீன இடைநிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் RM20 மில்லியன் நிதியை அறிவிக்கிறேன்,” என்று அவர் இன்று யுக் சாய் சீன இடைநிலைக் பள்ளியில் நடைபெற்ற, சீன புத்தாண்டு,
ரமலான் மாதத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட ‘kasih MADANI’ நிதியுதவி நிகழ்ச்சியில் உரையாற்றும்போது இதனை கூறினார்.

நாட்டின் கல்வி முறைமை கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களை மட்டுமல்லாமல், ஒழுக்கம், நல்ல பண்பு, இன, மத வேறுபாடுகளைத் தாண்டிய பரஸ்பர மரியாதையையும் வளர்க்க வேண்டும் என்று மேலும் பேசிய பிரதமர் வலியுறுத்தினார்.

அதே நிகழ்ச்சியில், தம்புன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ள அன்வார், அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் பிரதிநிதிகளுக்கு நிதியுதவியும் வழங்கினார்.

சுமார் 3,000 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு கலை நிகழ்ச்சிகள், நிதியுதவி வழங்கல்களுடன் விழாவைச் சிறப்பித்தனர்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset