நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெத்தடோன் மருந்து குடித்து உயிரிழந்த சிறுவன்

காஜாங்: 

சுங்கை ராமாலில் மெத்தடோன் மருந்தைக் குடித்து 11 வயது சிறுவன் உயிரிழந்தச் சம்பவம்  நிகழ்ந்துள்ளது. அம்மருந்து அவரது தந்தைக்குச் சொந்தமானது என போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

அந்த மருந்து தந்தையின் மருத்துவ சிகிச்சைக்காகப் பயன்படுத்தி வந்ததாகவும், அது மருத்துவரின் ஆலோசனையுடன் பெறப்பட்டதாகவும் சிலாங்கூர் மாநில காவல் துறை தலைவர், டத்துக் ஷசேலி கஹார் தெரிவித்தார்.

“காஜாங் பகுதியில் நடந்த இந்த மெத்தடோன் சம்பவம் தொடர்பான விசாரணையில், தற்போது வரை எந்த குற்ற நோக்கமும் அல்லது குற்றச்செயல் அம்சமும் இல்லை. இது கவனக்குறைவால் ஏற்பட்ட சம்பவமாகவே தெரிகிறது.

“அந்த மருந்து சிறுவனின் தந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வழங்கப்பட்டது. அதை பயன்படுத்தும் போது ஏற்பட்ட அலட்சியமே இந்த துயரச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம்,” என்று அவர் தெரிவித்தார்.

இன்று, காஜாங் எம்.ஆர்.டி. ஸ்டேடியம் நிலையத்தில் நடைபெற்ற ‘பாதுகாப்பு நடவடிக்கை – சமூக விழிப்புணர்வு’ நிகழ்ச்சியின் போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset