நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹம்சாவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து தேசியக் கூட்டணி விவாதிக்கும்: துவான் இப்ராஹிம்

கோலாலம்பூர்:

டத்தோஸ்ரீ ஹம்சாவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து தேசியக் கூட்டணி விவாதிக்கும்.

பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் இதனை கூறினார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பெர்சத்துவின் முன்னாள் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து விரைவில் தேசியக் கூட்டணி விவாதிக்கும்.

எதிர்க்கட்சித் தொகுதியைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்த விவாதத்தில் ஈடுபடுத்துவார் என்று கூறினார்.

இந்த பிரச்சினை விரைவில் எதிர்க்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசியக் கூட்டணி இடையே விவாதிக்கப்படும் என்றார்.

முன்னதாக ஹம்சாவுக்கும் அதன் தலைவர் மொஹைதின் யாசினுக்கும் இடையே ஏற்பட்ட தலைமைப் பிளவைத் தொடர்ந்து நேற்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட 17 பெர்சாத்து தலைவர்களில் ஹம்சாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset