நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியா குடியேற்ற திட்டம் நொறுங்கியது: மலேசிய போலிஸ் அதிரடி நடவடிக்கை

ஈப்போ:

செலக்கோ, பாகன் டாத்துக் பகுதிகளில் இரு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 36 பேரைப் கைது செய்து இந்தோனேசியாவிற்கான குடியேற்ற முயற்சியைப் போலீஸ் தோற்கடித்தது. இதில் இரண்டு முக்கிய குழுத்தலைவர்கள் அடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்தத் தடை நடவடிக்கைகள், பாகன் டாத்துக் காவல் நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவு, சிறப்பு கிளை அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்டது என்று பேராக் மாநில காவல் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 29 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் 21 ஆண்கள், 4 இந்தோனேசியப் பெண்கள், 4 வங்காளத்தேச ஆண்கள் (வயது 18–55) ஆகியோர் இருந்தனர்.

 இவர்கள் கடல் வழியாக இந்தோனேசியாவிற்கு அனுப்ப முயற்சித்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் குடியேரிகளுக்கு உணவு, போக்குவரத்துக்கு உதவியதாக நம்பப்படும் ஹோண்டா சிட்டி கார் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.

இரண்டாவது சோதனையில் 20–36 வயதுள்ள இரண்டு ஆண்கள், மூன்று இந்தோனேசியப் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் குற்றம் 2007 மக்கள் கடத்தல், குடியேற்ற தடுப்பு சட்டம், 1959/63 குடியேற்றச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset