நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

காசாவில் போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஸ்டார்பக்ஸைப் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை: வின்சென்ட் டான்

கோலாலம்பூர்:

காசாவில் போர் நிறுத்தத்திற்குப் பிறகு
ஸ்டார்பக்ஸைப் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை.

பெர்ஜாயா கார்ப்பரேஷன் பெர்ஹாட்டின் நிறுவனர், ஆலோசகருமான டான்ஸ்ரீ வின்சென்ட் டான் இதனை கூறினார்.

இந்த ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வரும் காசாவில் போர் நிறுத்த அறிவிப்பு குறித்து  அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார், 

குறிப்பாக ஸ்டார்பக்ஸ் மலேசியா இதற்குப் பிறகு பிரகாசிக்கும்.

என்னை பொறுத்தவரை, போர் நிறுத்தத்துடன் ஸ்டார்பக்ஸ் பிராண்டைப் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை.

காரணம் அது நமது நாட்டுக்கு சொந்தமான நிறுவனமாகும்.

இப்போது காசாவில் போர் நிறுத்தம் பற்றிய செய்தி வந்துள்ளது. இது உண்மையிலேயே அனைவருக்கும் நல்ல செய்தி. 

காசா மீண்டும் அமைதியாக இருக்கும். அதைத் தான் நாம் அனைவரும் விரும்புகிறோம்.

அப்படியானால் நீங்கள் ஏன் மீண்டும் ஸ்டார்பக்ஸைப் புறக்கணிக்க விரும்புகிறீர்கள்?.

இனி அந்த புறக்கணிப்பு தேவையில்லை என்று சீனப் புத்தாண்டு நன்கொடை வழங்க விழாவிற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset