நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

2 விண்கலன்களை இணைத்து இஸ்ரோ சாதனை

புது டெல்லி: 

ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை வெற்றிகரமாக விண்ணில் ஒருங்கிணைத்து புதிய மைல்கல் சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது.

விண்வெளியில் ஆய்வு மையத்தை அமைப்பதற்கான முன்னோட்ட முயற்சியில் இந்தியா வெற்றி கண்டுள்ளது.

இதன் மூலம் அமெரிக்கா, சீனா, ரஷியாவைத் தொடர்ந்து விண்கலன் ஒருங்கிணைப்பை முன்னெடுத்த 4ஆவது நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

2035க்குள் விண்வெளி ஆய்வு நிலையத்தை விண்ணில் நிறுவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இதற்கான பிரத்யேக விண்கலங்கள் 2028-இல் இந்தியா செலுத்த உள்ளது. அதற்கான முன்னோட்டம்தான் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset