
செய்திகள் வணிகம்
வங்கி ATM-இல் விதிக்கப்படும் 1 ரிங்கிட் கட்டணத்தை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்: டத்தோ கலைவாணர்
கோலாலம்பூர்:
வங்கி ஏடிஎம்மில் விதிக்கப்படும் கட்டணமான 1 ரிங்கிட்டை அரசாங்கம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசு சாரா அமைப்பான நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ கலைவாணர் வலியுறுத்தினார்.
நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் மக்கள் வங்கி கணக்குகளை கொண்டுள்ளனர்.
ஒவ்வொரு முறையும் அம் மக்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது 1 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படுகிறது.
வங்கியில் உள்ளது நமது பணம். அதை மீட்பதற்கு எதற்கு 1 ரிங்கிட் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது தான் அனைவரின் கேள்வியாக உள்ளது.
இந்த 1 ரிங்கிட் கட்டணத்தால் கிட்டத்தட்ட 544 மில்லியன் ரிங்கிட் வருமானம் ஈட்டப்படுகிறது.
இதில் 271 மில்லியன் ரிங்கிட் மட்டும் லாபமாக ஈட்டப்படுகிறது. இந்த பணம் இருந்தால் மக்களுக்கு பல நலத் திட்டங்களை மேற்கொள்ளலாம்.
அதே வேளையில் இது மக்களின் பணமாகும். அப்பணத்தால் மக்களுக்கு தான் பயன் பெற வேண்டும்.
இதன் அடிப்படையில் தான் கோவிட் காலத்தில் முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதி இந்த கட்டணத்தை ரத்து செய்தார்.
ஆகவே இந்த கட்டணத்தை ரத்து செய்ய கோரி தேசிய வங்கி பணியாளர்கள் சங்கம் கையெழுத்து வேட்டையை தொடங்கியுள்ளனர்.
www.Change.org எனும் அகப்பக்கத்தில் இந்த கையெழுத்து வேட்டைக்கான மனு உள்ளது. ஆகவே மக்கள் இம்முயற்சி முழு ஆதரவை தர வேண்டும்.
அதே வேளையில் அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும். இதுவே எங்களின் கோரிக்கை என்று டத்தோ கலைவாணர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 6:43 am
பாகிஸ்தானை விட்டு செல்லும் மைக்ரோசாஃப்ட்
July 4, 2025, 6:23 pm
மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் அபராதம் இல்லை: இரு வங்கிகள் அறிவிப்பு
July 1, 2025, 12:28 pm
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm