நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மோசடி முதலீட்ட்டை நம்பி  கணினி நிர்வாகி RM1,37,000 இழந்தார்

குவாந்தான்: 

கடந்த நவம்பர் மாதம் அதிக லாபத்தைக் கொடுக்கும் போலி முதலீட்டுத் திட்டத்திற்கு நம்பி, ஒரு நிறுவன நிர்வாகி, தனது RM1,37,000 சேமிப்பை இழந்துள்ளார்.

32 வயதான அந்த நபரை, நவம்பர் 28ஆம் தேதி சந்தேகத்திற்குரிய ஒருவர் கிரிப்டோகரன்சி முதலீட்டின் வாயிலாக ஈர்த்தாக பகாங் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் டத்தோக் ஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.

அதன்பின், அவரை RASTHRV என்ற பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

"பாதிக்கப்பட்டவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து RM87,000 ஐ முதலில் Luno செயலிக்கும், பின்னர் நவம்பர் 28 முதல் புதன்கிழமை (ஜனவரி 15) வரை RASTHRV செயலிக்கும் மாற்றுமாறு பணிக்கப்பட்டார்."

இதனிடையே “புதன்கிழமை, சுமார் RM1,00,000 லாபத்தை பெற RM50,000 முன்பணம் செலுத்துமாறு அவரிடம் கூறப்பட்டது.

“அப்போது, சொன்ன லாபம் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட நபர் இது ஒரு மோசடி என்று சந்தேகிக்கத் தொடங்கினார். அவர் தனது சேமிப்பையே முதலீடாக செலுத்தியிருந்தார்,” என்று யஹாயா கூறினார்.

விரைவாகவும் அதிக லாபத்தைக் கொடுப்பதாகக் கூறும் முதலீட்டுத் திட்டங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள் என யஹாயா கேட்டுக் கொண்டார்.

இப்படிப்பட்ட முதலீடுகளில் பணத்தை செலுத்துவதற்கு முன், மலேசிய காவல்துறை (RMP) அல்லது பேங்க் நெகாரா மலேசியா உடன் சரிபார்த்து செயல்படுங்கள்,” என்றும் அவர் அறிவுறுத்தினார்.

-தயாளன் சண்முகம்  

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset