நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தொழில்நுட்பம்

By
|
பகிர்

இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான தடைகளை நீக்கியது அமெரிக்கா

வாஷிங்டன்:

இந்தியாவின் பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்பட 3 இந்திய அணுசக்தி நிறுவனங்கள் மீதான பல்வேறு தடைகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

 இதன் மூலம் இந்திய-அமெரிக்க நிறுவனங்கள் அணுசக்தி தொடா்பான ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வழிகள் திறக்கப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் அடுத்த சில நாள்களில் பதவியேற்க உள்ள நிலையில் அதிபா் ஜோ பைடன் நிா்வாகம் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளது.

 பாபா அணு ஆராய்ச்சி மையம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், இண்டியன் ரோ் எா்த்ஸ் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்காவின் தடைப் பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. பனிப்போா் காலகட்டத்தில் இந்த நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்தது.

இதன் மூலம் 16 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் உள்ள இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்திலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபா் ஜாா்ஜ் டபிள்யூ புஷ் - அப்போதைய இந்திய பிரதமா் மன்மோகன் சிங் இடையே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

இதற்கான பேச்சுவாா்த்தை 3 ஆண்டுகள் வரை நீடித்தது. இதன் மூலம் ஆக்கபூா்வமான அணுசக்தி பயன்பாட்டுக்கான நவீன தொழில்நுட்பங்கள் இந்தியாவுக்கு கிடைக்கும்.

தடைப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ள இந்திய அணுசக்தி நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்களுடன் அணுசக்தி சாா்ந்த ஒத்துழைப்பு மற்றும் ஒப்பந்தங்களை மேற்கொள்ள முடியும். அணுசக்தி சாா்ந்த முக்கிய தாதுப்பொருள்கள், அணுமின் உற்பத்தி சாா்ந்த நவீன உபகரணங்கள், நவீன தொழில்நுட்பங்களும் இந்தியாவுக்கு கிடைக்கும்.

அமெரிக்க அரசின் இந்த தடை நீக்க நடவடிக்கை இருநாடுகள் இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் என்று அமெரிக்காவுக்கான முன்னாள் இந்தியத் தூதா் தரண்ஜீத் சிங் தெரிவித்தாா். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset