
செய்திகள் இந்தியா
இந்திய அரசிடம் மன்னிப்பு கோரியது மெட்டா
புது டெல்லி:
இந்திய தேர்தல் குறித்த மெட்டா நிறுவன தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்த தவறான கருத்துக்காக அதன் இந்திய தலைமையகம் மன்னிப்புக் கோரியது.
அமெரிக்காவில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய மார்க் ஜூக்கர்பெர்க், கொரோனாவுக்கு பிறகு பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ஆளும் கட்சிகள் தோல்வியைச் சந்தித்தன. அதுபோல, இந்தியாவிலும் நடந்தது என்று கூறினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து இந்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 2024இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 64 கோடிக்கும் அதிகமானோர் வாக்களித்து தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்தது.
இதுபோன்ற தவறான கருத்துகள், மெட்டா தளங்களின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் என்றார்.
மெட்டா இந்தியா துணைத் தலைவர் சிவ்நாத் துக்ரல் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,கரோனாவுக்கு பிந்தைய தேர்தலில் பல நாடுகளில் ஆளும் கட்சி தோல்வியடைந்தாக மெட்டா தலைவர் கூறியுள்ளார்.
ஆனால், அது இந்தியாவுக்கு பொருந்தாது. எவ்வித உள்நோக்கமும் இல்லாத இந்தத் தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். எங்கள் நிறுவனத்துக்கு இந்தியா சிறப்பு வாய்ந்த ஒரு நாடு. எதிர்காலத்தில் தொடர்ந்து கைகோத்து பயணிக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 6:10 pm
பாலியல் பலாத்காரம் செய்து கோயில் நிலத்தில் 100 பெண்கள் கொன்று புதைப்பு?
July 18, 2025, 4:39 pm
ராபர்ட் வதேரா மீது முதல் முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல்
July 18, 2025, 4:35 pm
தமிழகத்தை தொடர்ந்து பிகாரிலும் இலவச மின்சாரம்
July 18, 2025, 1:47 pm
தப்லீக் ஜமாத்தினர் மீதான வழக்குகளை ரத்து செய்தது தில்லி உயர்நீதிமன்றம்
July 18, 2025, 10:30 am
விமான விபத்துக்குப் பின் – எரிபொருள் கட்டுப்பாட்டு முறைகள் சீராகவே செயல்படுகின்றன: ஏர் இந்தியா
July 17, 2025, 8:36 pm
நடுவானில் என்ஜின் செயலிழப்பு: இண்டிகோ அவசர தரையிறக்கம்
July 17, 2025, 10:23 am
இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை
July 17, 2025, 9:46 am
ஏர் இந்தியா விமான விபத்து: தலைமை விமானி செய்த தவறா?
July 16, 2025, 5:54 pm