
செய்திகள் தொழில்நுட்பம்
அமெரிக்காவிலிருந்து நிலாவில் ஆய்வு நடத்த 2 லேண்டர்கள் அனுப்பப்பட்டன
கேப் கேனவரல்:
நிலவில் ஆய்வு நடத்துவதற்காக, ஸ்பேஸ்எக்ஸ்' நிறுவனம் தனது 'பால்கன் 9' ராக்கெட் மூலம் 2 'லேண்டர்' சாதனங்களை நிலாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
அமெரிக்காவில் கேப் கேனவரல் நகரில் உள்ள அமெரிக்க விண்வெளி மையமான 'நாசா'வின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று அவை செலுத்தப்பட்டன.
ஆண்டுகளுக்கு முன்பு, ஜப்பான் நாட்டின் 'ஐஸ்பேஸ்' நிறுவனத்தின் முதலாவது 'லேண்டர்' நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
தற்போது, அந்நிறுவனம் தனது லேண்டரை மீண்டும் அனுப்பி வைத்துள்ளது. அதனுடன் 'ரோவர்' சாதனமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆய்வுக்காக நிலவில் அழுக்குகளை சேகரிக்க 'ரோவர்' சாதனம் பயன்படுத்தப்படும்.
எதிர்கால ஆராய்ச்சியாளர்களுக்காக நிலவில் உணவு மற்றும் நீர் ஆதாரம் இருக்கிறதா என்ற ஆய்வும் நடத்தப்படும்.
இதுபோல், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த 'பயர்பிளை ஏரோஸ்பேஸ்' நிறுவனத்தின் 'லேண்டர்' சாதனம் முதல் முறையாக நிலாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது
2 மீட்டர் உயரம் கொண்ட அந்த லேண்டர், முதலில் நிலாவை சென்றடையும். மார்ச் மாதத்தின் ஆரம்பத்திலேயே போய்ச் சேரும்.
ஆய்வுக்காக அழுக்குகளை சேகரிக்கும். மேற்பரப்புக்கு அடியில் நிலவும் வெப்பநிலை அளவிடப்படும்.
ஆனால், சற்று பெரிதான 'ஐஸ்பேஸ்' நிறுவனத்தின் லேண்டர் மெதுவாக பயணம் செய்யும். மே மாதம் அல்லது ஜூன் மாதத்தில்தான் நிலவில் தரையிறங்கும்.
மேற்கண்ட 2 லேண்டர்களும் ஒன்றாக ராக்கெட்டில் அனுப்பி வைக்கப்பட்ட போதிலும், 1 மணி நேரத்துக்கு பிறகு, திட்டமிட்டபடி பிரிந்து, தனித்தனி சுற்றுவட்டப்பாதையில் பயணத்தை தொடர்ந்தன.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
August 25, 2025, 8:03 pm
ககன்யான் திட்டத்தில் இந்தியா முக்கிய சோதனை
August 15, 2025, 12:02 am
நிலவில் அணு மின் நிலையம்: விரைவுபடுத்துகிறது நாசா
August 9, 2025, 2:54 pm
பிரபல அமெரிக்க விண்வெளி வீரர் ஜிம் லோவெல் காலமானார்
July 31, 2025, 10:18 pm
ரூ.12,000 கோடியிலான இஸ்ரோ - நாசாவின் நிசார் செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்
July 28, 2025, 1:37 pm
ரூ.30,000 கோடியில் தமிழ்நாட்டில் ஆப்பிள் நிறுவனத்துக்கான மின்னணு உதிரிபாக தொழிற்சாலை
July 28, 2025, 10:50 am
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
July 16, 2025, 5:58 pm
விண்ணிலிருந்து மண்ணில் கால்பதித்தார் சுபான்ஷு சுக்லா
July 3, 2025, 4:36 pm