நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கூடுதல் உத்தரவு, ஹாம் சாண்ட்விச் பிரச்சினை குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை: ஃபஹ்மி ஃபட்சில்

புத்ராஜெயா:

கூடுதல் உத்தரவு, ஹாம் சாண்ட்விச் பிரச்சினை குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை.

தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் இதனை தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் தனது சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டிலேயே அனுபவிக்க வேண்டும் என்ற கூடுதல் உத்தரவு தொடர்பான தடை உத்தரவு குறித்து அமைச்சரவை விவாதிக்கவில்லை.

மேலும் இந்த விவகாரம் குறித்து அமைச்சரவை சட்டத்துறை தலைவர் அலுவலகத்திற்கு அறிவுறுத்தவில்லை.

முன்னதாக கடந்த ஜனவரி 13 அன்று  நஜிப்பின் வழக்கறிஞர், கூடுதல் விவகாரம் தொடர்பாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திடம் இருந்து சட்டத்துறை தலைவரின் தடை உத்தரவைப் பெற முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில் செல்லுபடியாகும் சான்றிதழ் இல்லாமல் ஹலால் சின்னத்தை பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஹாம், சீஸ் சாண்ட்விச்கள் தொடர்பான தற்போதைய சர்ச்சை குறித்தும் அமைச்சரவை விவாதிக்கவில்லை.

குறிப்பாக இன்று எங்களுக்கு சாண்ட்விச்களும் பரிமாறப்படவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset