நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தீபகற்ப மலேசியாவில் ரோன் 97 ரகப் பெட்ரோல் ,  டீசல் ஆகியவற்றின் விலை 5 சென் உயர்வு

கோலாலம்பூர்: 

உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்ததைத் தொடர்ந்து, தீபகற்ப மலேசியாவில் ரோன் 97 ரகப் பெட்ரோல் ,  டீசல் ஆகியவற்றின் டீசலின் சில்லறை விலைகள் லிட்டருக்கு 5 சென் உயர்த்தப்பட்டுள்ளன.

ரோன் 97 ரகப் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.38 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன்னதாக, ரோன் 97 ரகப் பெட்ரோலின் விலை லிட்டருக்கு 3.33-க்கு விற்கப்பட்டது. 

மேலும், தீபகற்ப மலேசியாவில் டீசல் விலையும் லிட்டருக்கு 3.03 ​​இல் இருந்து RM3.08 ஆக உயர்ந்துள்ளது. 

உலகளாவிய சந்தை நிலவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து, தானியங்கி விலை நிர்ணய பொறிமுறை சூத்திரத்தின் அடிப்படையில் வாராந்திர விலைகளை சரிசெய்யும் என்று நிதி அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset