நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் நட்சத்திர விழாவில் சாதனை மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்

ஜொகூர்பாரு:

ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின்
கல்வி கேள்விகளில் சாதனை படைத்த மாணவர்களைப் பாராட்டும் வகையில் ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் சாதனை நட்சத்திர விழா இஸ்கண்டார் புத்திரி பன்நோக்கு மண்டபத்தில் கோலாகலமாய் நடைபெற்றது.

இஸ்கண்டார் புத்திரி மாநகர் மன்ற உறுப்பினர்  வெ. சங்கரபாண்டியன்  இம்மண்டபத்தை நிகழ்விற்காகப் பெற்றுத் தந்தார்.

ரினி தமிழ்ப்பள்ளியின் மாலைப் பிரிவு துணைத்தலைமையாசிரியை  மு.தமிழரசி, தலைமையில் ஆசிரியை லீலாஷினி, அவர்களின் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்நிகழ்வினைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

வகுப்பறை தர மதிப்பிட்டில் சிறந்த அடைவுநிலையைப் பெற்ற மாணவர்களை இன்று சிறப்பிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டதாகக் கூறிய பள்ளியின் தலைமையாசிரியை  சு. தமிழ்ச்செல்வி,

இந்த அங்கீகாரம் மாணவர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்து அவர்களை வெற்றி பாதைக்கு இட்டுச்செல்லும் எனக் கூறினார். 

மேலும், அடுத்தாண்டின் சாதனை நட்சத்திர விழா பள்ளி மண்டபத்தில் நடைபெறுமென நம்பிக்கை தெரிவித்தார். 

இவ்விழாவிற்குச் சிறப்பு வருகையளித்த ஜொகூர் மாநில பாலர் பள்ளி, ஆரம்பப்பள்ளி, பள்ளி நிர்வாகப் பிரிவு உதவி இயக்குநர்  இரவிச்சந்திரன் இராமச்சந்திரன் அவர்கள் நாம் மாற்றங்களை எதிர்நோக்கி மாணவர் சமுதாயத்தை வடிவமைக்க வேண்டும் எனக் கூறினார். 

மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிக்கொணர பல்வேறு தளங்களை அமைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

இன்றைய நிகழ்வின் சிறப்புப் பிரமுகர் டத்தோ  புருஷோத்தமன்,  இம்மாணவர் சமுதாயம் எதிர்காலத்தில் தலைசிறந்து விளங்க வேண்டுமெனில் கல்வி ஒன்றே அவர்களுக்குப் பற்றுக்கோல் எனக் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset