செய்திகள் மலேசியா
கலப்பு அரிசி விற்பனை குறித்து ஆய்வு நடைபெற்று வருகின்றது: மாட் சாபு
கோலாலம்பூர்:
உள்ளூர் சந்தையில் கலப்பு அரிசி விற்பனையை அனுமதிக்கும் திட்டம் குறித்து விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சகம் ஆய்வு நடத்தி வருவதாக அதன் அமைச்சர் டத்தோஶ்ரீ முஹம்மத் சாபு தெரிவித்தார்.
நாட்டின் அரிசி விநியோக பிரச்சனைகளுக்கு சாத்தியமான தீர்வாக மலேசிய போட்டி ஆணையமும் (MyCC) இந்தத் திட்டத்தை ஆதரிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டத்தைப் பற்றி விவாதிக்க அமைச்சகம் பங்குதாரர்களுடன் ஈடுபடும் என்றும் பின், அஃது ஒரு முடிவிற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தற்போது, கலப்பு அரிசி விற்பனையை அனுமதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டு வருகிறோம்.
அதற்கு எதிராக நாங்கள் முடிவு செய்தால், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் அரிசி போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தற்போதைய பிரச்சனை என்னவென்றால், பூமிபுத்ரா உற்பத்தியாளர்கள் உட்பட பல உற்பத்தியாளர்கள், 10 கிலோ மூட்டைக்கு RM26க்கு அரிசியை விற்க முடியாது என்று புகார் அளித்துள்ளனர். ஏனெனில் இது 2008-இல் நிர்ணயிக்கப்பட்ட விலையாகும்.
இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளை இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பிரதமரிடம் விரைவில் வழங்குவோம்.
இதனால் அரிசி விலை நிர்ணய கட்டமைப்பைச் சரிசெய்ய முடியும் என்று அவர் கூறினார்.
எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் நெல் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்காமல் இருக்க முன்னுரிமை அளிக்கும் என்றும் அதிக அரிசி விலைகளால் பொதுமக்கள் அதிக சுமைக்கு ஆளாகாமல் இருக்க மாற்று வழிகளை ஆராயும் என்றும் சாபு வலியுறுத்தினார்.
உற்பத்தியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை விலை குறித்தும் அமைச்சகம் விவாதிக்கும் என்றும், சில உற்பத்தியாளர்கள் நிர்ணயித்த அதிக விலையில் அரிசி வாங்க இயலாமை காரணமாக எந்த தரப்பினரும் 'ஒதுக்கப்பட்டதாக' உணரவில்லை என்பதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
January 15, 2025, 6:03 pm
தீபகற்ப மலேசியாவில் ரோன் 97 ரகப் பெட்ரோல் , டீசல் ஆகியவற்றின் விலை 5 சென் உயர்வு
January 15, 2025, 5:31 pm
மலேசியா இந்த ஆண்டு 4.9% பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்யும்: டத்தோஶ்ரீ முஹம்மத் இக்பால்
January 15, 2025, 5:09 pm
இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு ஒற்றுமையைக் கடைப்பிடிப்போம்: கோபிந்த் சிங்
January 15, 2025, 5:04 pm
அமைச்சரின் மகன் தொடர்பான விசாரணைகள் மூடிமறைக்கப்படாது: ஃபஹ்மி ஃபட்லி
January 15, 2025, 5:01 pm
1 எம்டிபி, எஸ்ஆர்சி கடன்களை தீர்த்து வைக்க சீனாவை நான் கேட்கவில்லை: நஜிப்
January 15, 2025, 4:44 pm
இவ்வாண்டு நாட்டில் விமானப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு: அந்தோனி லோக்
January 15, 2025, 12:50 pm
கொள்முதல் வழிமுறைகளை கேகே மார்ட் கடுமையாக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர்
January 15, 2025, 12:48 pm