நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

1 எம்டிபி, எஸ்ஆர்சி கடன்களை தீர்த்து வைக்க சீனாவை நான் கேட்கவில்லை: நஜிப்

புத்ராஜெயா:

1 எம்டிபி, எஸ்ஆர்சி கடன்களை தீர்த்து வைக்க சீனாவை நான் கேட்டது இல்லை என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.

1 எம்டிபி, அதன் முன்னாள் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனலின் கடன்களைத் தீர்க்க சீன உதவியை நாட முயன்றதாக அரசுத் தரப்பு கூறியதை அவர் மறுத்தார்.

மேலும் மலேசியாவில் உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஈடுபடுவதில் சீனா ஆர்வமாக உள்ளதா என்பதை மதிப்பிடுவதற்காக, ஜூன் 2016ஆம் ஆண்டு தனது அப்போதைய சிறப்பு அதிகாரி அம்ஹாரி அபெண்டி நசருடினை இரண்டு நாள் பயணமாக சீனாவிற்கு அனுப்பியதாக அவர் புத்ராஜெயா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தனக்கு எதிரான  2.27 பில்லியன் ரிங்கிட் அதிகார துஷ்பிரயோகம், பணமோசடி விசாரணையில் குறுக்கு விசாரணையின் போது அவர் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset