நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு ஒற்றுமையைக் கடைப்பிடிப்போம்: கோபிந்த் சிங்

டாமன்சாரா:

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அனைவரும் ஒற்றுமையை கடைப்பிடிக்க வேண்டும். இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் இதனை கூறினார்.

டாமன்சாரா இந்திய கலாச்சார சங்கத்தின் தலைவர் ரமேஷ் பச்சையப்பன் ஏற்பாட்டில் நேற்று இரவு பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.

டமான்சாரா டாமாயில் நடைபெற்ற இந்த தைப்பொங்கல் விழாவில் 500க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

அமைச்சர் கோபிந்த் சிங்கும் டாமான்சாரா டாமாய் இந்திய சமுக சங்கத்தின் தலைவர் ரமேஷ் ஆகியோர் கூட்டாக இணைந்து பொங்கல் வைத்தனர்.

தமிழர்கள் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

ஒவ்வொரு ஆண்டும் டமான்சாரா டாமாயில் தைப்பொங்கல் விழா விமரிசையாக நடைபெற முழு ஆதரவு வழங்கி வரும் டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோவுக்கு ரமேஷ் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

உலகம் மிக வேகமாக நகர்கிறது, நாம் போட்டித் தன்மையுடன் இருக்க முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

இந்திய சமூகத்தின் நலன் உட்பட மக்களின் நலனுக்காக டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல், புதுமைகளை ஊக்குவித்தல், வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் வாய்ப்புகளை வழங்கும் முயற்சிகள் மூலம் மலேசியாவின் இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்கு அமைச்சு உறுதி பூண்டுள்ளது.

தைப் பொங்கல் பண்டிகை நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு இந்திய குடும்பத்திற்கும் வாழ்வாதாரத்தையும், மகிழ்ச்சியையும், வெற்றியையும் தரட்டும் என்று அவர் சொன்னார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset