
செய்திகள் இந்தியா
மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும் பரபரப்பு
மும்பை:
மும்பை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவாவில் இருந்து மும்பை வந்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் சில மணி நேரத்தில் வெடித்து சிதறும் எனவும் மின்னஞ்சல் ஒன்று வந்தது.
இது குறித்த தவலின்பேரில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு படையினர் மும்பை விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தனர்.
அப்போது இரவு 10.30 மணி அளவில் மும்பையில் அந்த விமானம் தரைஇறங்கியது. பாதுகாப்பு கருதி அந்த விமானம் தனித்து விடப்பட்டது.
இதனால் விமானத்தில் இருந்த பயணிகளிடம் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர்.
அவர்களின் உடைமைகள் சோதனை நடத்திய பின்னர் விமானத்தில் பலத்த சோதனை நடத்தப்பட்டது.
இச்சோதனையில் எதுவும் சிக்காததால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆசாமி பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 7, 2025, 12:56 pm
புதிய சுங்கக் கட்டண திட்டத்தை கொண்டு வரும் ஒன்றிய அரசு
February 6, 2025, 9:51 pm
40 அடி கிணற்றில் விழுந்த கணவரை காப்பாற்றிய மனைவி
February 5, 2025, 10:47 pm
அலுவலகங்களில் மராத்தி கட்டாயம்: அரசு உத்தரவு
February 5, 2025, 10:17 pm
கேரள முஸ்லிம் லீக் தலைவர்களுடன் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு
February 5, 2025, 3:43 pm
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு கிலியைக் கிளப்பும் எச்-1பி, எல்-1 விசா விவகாரம்
February 5, 2025, 7:11 am
சத்துணவில் உப்புமாவுக்கு பதில் பிரியாணி, பொரிச்ச கோழி வேண்டும் என்று கேட்ட சிறுவன்: அமைச்சர் ஏற்பு
February 5, 2025, 6:57 am