நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தென் கொரியா அதிபர் யுன் சுக் இயோல் கைது: ஊழல் தடுப்பு அதிகாரிகள் நடவடிக்கை 

சியோல்: 

தென் கொரியா அதிபர் யுன் சுக் இயோல் அந்நாட்டின் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

அதிபர் யுன் சுக் இயோலின் இல்லத்திற்கு வந்த ஊழல் தடுப்பு அதிகாரிகள் அவரை அங்கேயே வைத்து கைது செய்தனர். 

தென் கொரியா நாட்டின் வரலாற்றில் நடப்பு பதவியில் இருக்கும் அதிபர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதன்முறையாகும். 

இராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரம் தொடர்பாக யுன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

அதுமட்டுமல்லாமல், மேலும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான குற்றங்களையும் எதிர்நோக்கியுள்ளார் 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன. 

நாட்டின் சட்டத்திட்டங்கள் யாவும் உடைந்துவிட்டதாகவும் தனக்கு எதிரான விசாரணைகள் யாவும் முறைகேடானது என்று யுன் முன்னதாக தனது இல்லத்திலிருந்து காணொளி ஒன்றை வெளியிட்டார் குறிப்பிடத்தக்கது 

கடந்த டிசம்பர் 3ஆம் தேதி தென்கொரியா நாட்டில் இராணுவ சட்டம் அமல்படுத்தப்பட்டது. இதற்கான அறிவிப்பினை யுன் சுக் இயோல் வெளியிட்டார். இந்நிலையில் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டு கொண்டு வரப்பட்டது 

பலமுறை அவரை விசாரணைக்கு அழைத்தும் விசாரணைக்கு வராததால் அவருக்கு எதிராக கைது ஆணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset