நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இரட்டை டைமண்ட் வெற்றியாளரை கொண்டாடுவதில் பப்ளிக் கோல்ட் பெருமை கொள்கிறது: டத்தோ வீரா லூயிஸ் எங்

பெட்டாலிங் ஜெயா:

இரட்டை டைமண்ட் வெற்றியாளரை கொண்டாடுவதில் பப்ளிக் கோல்ட் பெருமை கொள்கிறது.

பப்ளிக் கோல்ட் குழுமத்தின் தோற்றுநரும் மலேசிய தங்க சங்கத்தின் தலைவருமான  டத்தோ வீரா லூயிஸ் எங் இதனை கூறினார்.

பப்ளிக் கோல்ட் கடந்த 2008ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

மக்களுக்கு தங்க, வெள்ளி சேமிப்பு திட்டங்களை வழங்கும் முன்னோடியாக பப்ளிக் கோல்ட் விளங்கி வருகிறது.

அவ்வகையில் 2033/2024ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் பப்ளிக் கோல்ட் பல சாதனைகளை படைத்துள்ளது.

குறிப்பாக கடந்தாண்டு 17.5 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை லாபமாக ஈட்டியுள்ளது.

இதில் 300 மில்லியன் ரிங்கிட் பப்ளிக் கோல்ட் சாதனை தொழில் முனைவர்களுக்கு ஊக்குவிப்பாக வழங்கப்பட்டது.

அதன் அடிப்படையில் பப்ளிக் கோல்ட் வர்த்தகத்தில் சாதித்த சாதனையாளர்களை கொண்டாடும் வகையில் இன்றைய விழா நடைபெறுகிறது.

இதில் முஹம்மத் ஜூல்கிப்ளி, அவரது மனைவி நஜ்டா ஆகியோர் 6 ஸ்டார் இரண்டை டைமண்ட் விருதை வென்று சாதித்துள்ளனர்.

இவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் 600,000 தங்க சேமிப்பாளர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.

அதே வேளையில் பலரின் வாழ்க்கையிலும் இவர்களு உருமாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.

இரட்டை டைமண்ட் விருதின் மூலம் இவர்கள்  864,862.12 பரிசை வென்றுள்ளனர். 

மேலும் டைமண்ட் போனஸ், பங்களோ வீட்டிற்கான நிதி, ஆடம்பர காருக்கான நிதி, சிறந்த தலைமைத்துவத்திற்கான போனஸ் ஆகியவற்றை இவர்கள் பரிசாக பெறுகின்றனர்.

இதே போன்று 14 பேர் பல பிரிவுகளில் சாதனைகளை படைத்து விருதுகளை தட்டிச் சென்றுள்ளனர்.

இதன் அடிப்படையில் இரட்டை டைமண்ட் உட்பட அனைத்து வெற்றியாளரையும்  கொண்டாடுவதில் பப்ளிக் கோல்ட் பெருமை கொள்கிறது என்று டத்தோ வீரா லூயிஸ் எங் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset